Wednesday, November 2, 2011

பெண் தோழி


ஊர் சுற்றி 
வெட்டிக்கதை பேசி 
முடிந்தவரை கிண்டல் செய்து 
சொந்தம் சோகம் பகிர்ந்து 
சொல்லா ரகசியம் உடைத்து 
பகிர்ந்து உண்டு 
தேவை  தெரிந்து உதவி புரிந்து 
குடும்பத்தோடு அங்கமாகி 
என எல்லா நட்புக்குரிய புனிதத்தையும் 

வேண்டாம்...
என சொல்லும் தோழமை பெண்ணே
நட்புமா  நிபந்தனைகுட்பட்டது?

Sunday, October 2, 2011

இரவு மழை

இரவு மழை 

உடல் வலிக்கும் வரை வேலை,
நடை பாதை தூக்கம்,
இரவு மழையே 
பகலில் வா.

சம்பள பணம் தீர்ந்த பின்னும் 
கடன் வைத்து குடித்து விட்டு 
தெருவிலே விழுந்து விட்டேன்,
இரவு மழையே , எழுப்பவா.

காலை தூக்கம் வேண்டி,
முன் இரவே
வாசல்  கோலம்.
இரவு மழையே   வேண்டாம் போ. 

இருக்க இடம் இழந்து 
பிச்சையில் உயிர் வளர்த்தேன்,
இன்றேனும் குளிப்பதற்கு 
இரவு மழையே   உடனே வா.....

உடல் நினைய ஆசை
உடை நினைய இல்லை 
நாளைக்கும் வேலை
மழையே நீ இரவில் வா 

விளைநிலங்கள் என்ன விதவையா
வித்துக்கள் தாங்கி
மாசமாக காத்திருக்கிறது
மழையே நீ வா வா ....



 

Saturday, October 1, 2011

முரண்


விதவைக்கு வழி எங்கும் பூ தூவினர்
அவள் இறுதி ஊர்வலத்தில்.

Thursday, September 22, 2011

நாம் காதலிக்கவில்லை ...

உன் தூரத்து சிரிப்பால் கிளர்ச்சி ஆனேன்
காத்திருந்த போது  கவிஞன்ஆனேன்

தோள் உரச நடக்கும் போது மயக்கமானேன்
 ஆறுதல் காட்டும் போது அடிமையானேன்

முத்தமிடும் போது மோகமானேன் 
வேண்டாம் போ! என்ற போது வெறுத்து போனேன் 

நீ மட்டும் போதும் என்று பைத்தியமானேன் 
தாலி கட்டி உன் சொந்தமானேன் 

முதல் இரவில் காமமானேன்
பின் இரவில் பந்தமானாய் 

வருடங்கள் உருண்ட பின் என் நட்பானாய் 
முதுமையில் எனக்கு துணையானாய் 
இறந்த பின் என் தெய்வமானாய் 

இதில் எங்கிருத்து வந்தது காதல் ..............?








Wednesday, June 8, 2011

கனவினை நேசி



கனவினை நேசி  கனவினை நேசி 
உயிரோடு உருவான கனவினை நேசி 

பணம் காதல் பாசத்திற்கு கனவினை மறந்தோம்
எதோ ஒரு தொழில் செய்து வேசி போல் பிழைத்தோம் 

இரவெல்லாம் கனவினை கண்ணீரில் நினைத்தோம் 
யாருக்கும் தெரியாமல் மனதோடு புதைத்தோம் 

வலியோடும்   ரணமோடும்  முகம் தினம் சிரிக்கும் 
அடயாளம் தெரியாமல் கனவு தினம் அழுகும் 

கண் முன்னே கனவு இறக்க காப்பாற்ற மறந்தோம் 
விதிமேலே பழி வைத்து மீள துயர் கொண்டோம் 

இனியனும் தலை நிமிர்ந்து கனவினை நேசி 
மனமே நீ சுதந்திரமாய்   கனவினை நேசி






Wednesday, June 1, 2011

உன் சாயல்

தினம் செய்யும் பணிகளை
மனம் விரும்பாது
கனவெது  நிஜம் எது 
அது அறியாது


உன்னை எண்ணி இருக்கையில் 
உணர்வு  அறியாது 
சாலையோரம் வேலை நேரம் 
என  தெரியாது 

வரவில்லையே  நீ வரவில்லையே 
என ஏங்கி கொண்டிருப்பது 
என் தவறு இல்லையே

என் வாழ்வு நீ  இன்றி
என் உயிர் இல்லையே

Sunday, May 29, 2011

அழியா காதல்

நீ இன்றி என் காதல் உள்ளதடி
உன் பின்னே என்னாலும் செல்லுமடி 
நீ விட்டு போனாலும் வாழுமடி 
என்  காதல் அழிவதில்லை.

Saturday, April 23, 2011

சுழ்நிலை மாற்றம்

வெறுக்கும் புது வெயில் 
ஊர்ந்து செல்லும் வாகனம், 

தெரியும் வரை சாலை நெரிச்சல் 
காதடைக்கும் ஒலிப்பான் சப்தம், 

எல்லாம் ரசித்தபடி என் வண்டியில் நான்
பின் இருக்கையில் என் காதலி ...




Saturday, March 12, 2011

அழிவு

கரையை இடித்து உயிரை அழித்து 
உலகை விழுங்கும் இயற்கையே

மனிதனை தந்த நீயே ...
ஏன் மனிதனை அழிக்க பார்க்கின்றாய். 


மனிதனே மனிதன் அழித்தது போதாதோ  - ஏன் 
எம்குலத்தை அழிக்க நீ வந்தாயோ...

ஜப்பானிய சகோதரன் உயிருக்காக 
ஒப்பாரி வைக்கும் பாமரன் நான் 

என்னாலும் மனிதனை வேரோடு அழிக்கும்
எண்னத்தை விட்டுவிடு இயற்கையே

என்னாலும் இயற்கையை ரசிக்கின்றேன் 
நீ கொன்றால் என் அகம் துடிகின்றேன்




Thursday, February 3, 2011

புரிதல்

ஊழ்வினை உந்த என் இடம் மறந்தேன்
உன்னிடம் உன்னுள் ஒருநொடி மறந்தேன்
ஆணி  வேரென பூமி துளைத்து
ஆகாயம் தொட்ட காற்றாய் மகிழ்ந்தேன்
காதல் புரிந்ததில் காதல் புரிந்தது
தடையில்லா  அன்பில் புரிதல் வளர்ந்தது
த பதில் ஆ முன் அடி சுவைக்கும்
கவி இல்லா  தாள் என மனம் கிடக்கும்.



Monday, January 17, 2011

கள்ளம்

பொன் நிறை கவர்ந்து
செல்வனே ஆவான்,
இரவுரங்க கள்வன் கண் .


மண்சரிய உருளும் கல்யை
தொடநிழலின் கணம்
கள்வர் செயல்.

அறம் பிடியில் நிசம்
சொல்லியும் கள்வன்
பொருட்டு கதை.


தாழ்ஆழம், வெளியோட்டை,
நாய் கடைவிரல் அறிவன்,
களவிடும் முன்னம் .


அறமரிந்து பொய் தெரிந்தே
உரைப்பவன், கோமகனே
ஆயினும் கயவன்.

நேரடி கண் கதவடி
கான் இருப்பின், நோக்கின்றி
நுழைய கயவர்.


கார்சூழ்ந்து அசைய
மரமென மெய், ஊண்
கை களவாடும்.


கர்மமரிய கர்வம் கனக்கும் ஆதலால்
மர்மம் போதிக்கும் நிலை.

இலை மறை

பெண் கல்,
ஆண் உளி,
சில பாகம் சிதைத்து தான் 
சிற்பம் கொணரும்.  


Monday, January 3, 2011

தெய்வம்

உடல் கிழிந்த 
வலி மகிழ்ந்து,
உயிர்  உணவாய்
தந்த தாய்.