Showing posts with label எழுச்சி. Show all posts
Showing posts with label எழுச்சி. Show all posts

Wednesday, June 8, 2011

கனவினை நேசி



கனவினை நேசி  கனவினை நேசி 
உயிரோடு உருவான கனவினை நேசி 

பணம் காதல் பாசத்திற்கு கனவினை மறந்தோம்
எதோ ஒரு தொழில் செய்து வேசி போல் பிழைத்தோம் 

இரவெல்லாம் கனவினை கண்ணீரில் நினைத்தோம் 
யாருக்கும் தெரியாமல் மனதோடு புதைத்தோம் 

வலியோடும்   ரணமோடும்  முகம் தினம் சிரிக்கும் 
அடயாளம் தெரியாமல் கனவு தினம் அழுகும் 

கண் முன்னே கனவு இறக்க காப்பாற்ற மறந்தோம் 
விதிமேலே பழி வைத்து மீள துயர் கொண்டோம் 

இனியனும் தலை நிமிர்ந்து கனவினை நேசி 
மனமே நீ சுதந்திரமாய்   கனவினை நேசி






Thursday, October 7, 2010

எழுச்சி

நீ விழிக்கும் வரை இரவு நீடிக்கும்
உன் உணர்வின் ஓர் புள்ளி,
மருந்து கொண்ட தீக்குச்சி போல் _ உரச
மறந்து போனால் பற்றாது.

எங்கிருந்து வந்தது ஒரு துளி நெருப்பில்
ஒருகோடி பூலோகம்

உணர்ச்சி உரச எழுச்சி தீ எரியும் _ அதில்
இருண்ட வாழ்க்கைக்கு பாதை தெரியும்.

Tuesday, July 20, 2010

வெற்றி

இலக்கை நோக்கி  ஓடும் போது
முட்கள் கால்களுக்கு வலிப்பதிலையே 
ஓடி முடித்து வெல்லும்  போது 
வலித்தாலும் அது அழுவதில்லை