உன் தூரத்து சிரிப்பால் கிளர்ச்சி ஆனேன்
காத்திருந்த போது கவிஞன்ஆனேன்
தோள் உரச நடக்கும் போது மயக்கமானேன்
ஆறுதல் காட்டும் போது அடிமையானேன்
முத்தமிடும் போது மோகமானேன்
வேண்டாம் போ! என்ற போது வெறுத்து போனேன்
நீ மட்டும் போதும் என்று பைத்தியமானேன்
தாலி கட்டி உன் சொந்தமானேன்
முதல் இரவில் காமமானேன்
பின் இரவில் பந்தமானாய்
வருடங்கள் உருண்ட பின் என் நட்பானாய்
முதுமையில் எனக்கு துணையானாய்
இறந்த பின் என் தெய்வமானாய்
இதில் எங்கிருத்து வந்தது காதல் ..............?
சார், உங்க கவிதைக்கு ஒரு பதில் போடணும்னு தான் கூகிள் பிளஸ் ல எழுத ஆரம்பிச்சேன்.,
ReplyDeleteமுடிக்கும்போது ஒரு குட்டிக்கதையா மாறி நின்னது... சோ உங்க கவிதைக்கு என் பாராட்டு தான் அந்த கதை...
எனினும் மனமார்ந்த வாழ்த்துகள்...
unngal kathai megavum arumai, ungal yezuthu nadai mega mega arumai.
ReplyDelete