Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Thursday, October 11, 2012

பொறு



ஓடும்போது உதிர்ந்த கால்கள் 
தோல்வி தொட பயப்படும் வாழ்க்கை 
செய்யாத தவறுக்கு சுருக்கு
வெட்கமாய் உள்ளுணர்ச்சி ,  

கண் வலிக்கும் வரை கனவும் 
எண்ண முடியாத கோடி நிறம் 
கண் திறக்க பயம் 
யானை கனவு ஏறும்பான மாயம் 

காலம் விரைந்தோட வழியில்லையோ 
வலி மறைந்தால் சுகம் இல்லையோ 
கொதிக்கும் முள்ள 
வெடிக்கும் சொல் 
தாங்கும்மா .. அம்ம்மம்ம்மா ...

மரம் விழுந்தால் நன்று 
கிளை முறிந்தால் வலி 
இகழும் நாற்றம் சுமந்த நேரம் 
வெகுள்ளி மனதிடம் வேதனை பேரம் 

Tuesday, October 12, 2010

நிலைக்கும் புரியாதது...

வெறி கொண்டு எழுவதேல்லாம்
வெற்றி கொண்டே விழும்
தவிப்பதெல்லாம் தவறி விழும் .

மிக உயரத்தை அளக்க முடியாது
மிக காற்றை ருசிக்க முடியாது
மிக கற்பனையை விளக்க முடியாது.

நிலைக்காதது தான் மானுட இனம்,
புரியாதது தான் கடவுளினம்.
புரிந்தது  " நிலைக்கச் செய்வது புரியாதது தான் "
நிலைப்பது "புரியவைப்பதும்  நிலைகச்செய்வது தான்"