Showing posts with label காதல் பிரிவு. Show all posts
Showing posts with label காதல் பிரிவு. Show all posts

Monday, April 23, 2012

என்ன இது


என்ன வலி இது போதும் போதும் 
கண்கள்  வற்றிவிட்ட குளமாய் மாறும் 
சுவாச குழலுக்குள்  ஏதோ அடைக்கும் 
கண்ணீர் மட்டும் இந்த காதலில் ஜெயிக்கும், 

தூறல் நிற்கும்  வரை தூரம் நடந்தேன் 
என்னை கொள்ளும் அந்த காலம் கடந்தேன் 
தாளம் தப்பிவிட்ட சுருதியாய் மெலிந்தேன் 
கண்கள் மூடி அந்த காதலை புதைத்தேன்..... 

Sunday, May 29, 2011

அழியா காதல்

நீ இன்றி என் காதல் உள்ளதடி
உன் பின்னே என்னாலும் செல்லுமடி 
நீ விட்டு போனாலும் வாழுமடி 
என்  காதல் அழிவதில்லை.

Thursday, October 7, 2010

மறக்க நினைக்கிறன்.

காலை முதல் மாலை வரை உன்
நினைவு ஏங்குகிறது 
இரவான பொழுதிலே அது
ஏனோ ஓங்குகிறது 

பார்க்காத நாளெல்லாம் 
பரமாகி போனேன் 
பிரிவில் வளரும் நேசம் _உன்னில்
அடிமையாகி போனேன் 

அச்ச மற்ற மனதிற்கு 
அழகு கவிதை தந்தாய் _இன்று 
பேசாத பிரிவாலே 
அழவும் சொல்லித்தந்தாய்

கண்கள் மூடி பார்த்தாலும்  _அழுகை
நிற்க மறுக்குது
உள்ளுக்குளே வழிந்து சென்று 
நெஞ்சம் நிரப்புது. 






Tuesday, September 28, 2010

கலியுகக் காதல்



பாவம் காதல் இன்று பாடாய் படுகிறது,
உணர்வு மறுத்த உலக இளைஞ்சர்களிடம் தவிக்கிறது.

கழிவறை சுகம் தான் காலைகடன் முடியும் வரை,
காதலும் சுகம் தான் தேகக் கடன் தீர்க்கும் வரை. 

இது போல அர்த்தங்கள் காதல் என்றும் கண்டதில்லை 
காதல் அழியும் கலியுகத்தை நான் என்றும் விரும்பவில்லை. 


Friday, July 16, 2010

அன்பின் ஆழம்

முதல் காதல் தோற்கலாம்
விழி மூடி தூங்கலாம்
தொலை தூரம் போகலாம் - அதன்
நினைவுகள்  தொலையாது

உயிரோடு மோதிடும்
உணர்வோடு வாதிடும்
வயதோடு வளர்த்திடும் - அந்த
எண்ணங்கள் மறக்காது .

ஈரக்காரணம்