பொன் நிறை கவர்ந்து
செல்வனே ஆவான்,
இரவுரங்க கள்வன் கண் .
மண்சரிய உருளும் கல்யை
தொடநிழலின் கணம்
கள்வர் செயல்.
அறம் பிடியில் நிசம்
சொல்லியும் கள்வன்
பொருட்டு கதை.
தாழ்ஆழம், வெளியோட்டை,
நாய் கடைவிரல் அறிவன்,
களவிடும் முன்னம் .
அறமரிந்து பொய் தெரிந்தே
உரைப்பவன், கோமகனே
ஆயினும் கயவன்.
நேரடி கண் கதவடி
கான் இருப்பின், நோக்கின்றி
நுழைய கயவர்.
கார்சூழ்ந்து அசைய
மரமென மெய், ஊண்
கை களவாடும்.
கர்மமரிய கர்வம் கனக்கும் ஆதலால்
மர்மம் போதிக்கும் நிலை.
Monday, January 17, 2011
Monday, January 3, 2011
Monday, December 13, 2010
நிலா தரிசனம்
யாருமில்லா சமவெளியில்
குத்தும் குளிர் இரவில்
உனக்காக வெகுநேரம்
தனிமையில் நான்
கருமேகம் மறைக்க -முழு நிலவு
உன்னை தடுக்க
உன்னால் உருமாற
காத்திருக்கும் ஓநாய் நான்
மனிதனாய் மாற்ற வா
ஓநாய் உரு மாராவா
ஊளையிட இரவு அழைக்குது
முழுநிலவே வெளியே வா.
குத்தும் குளிர் இரவில்
உனக்காக வெகுநேரம்
தனிமையில் நான்
கருமேகம் மறைக்க -முழு நிலவு
உன்னை தடுக்க
உன்னால் உருமாற
காத்திருக்கும் ஓநாய் நான்
மனிதனாய் மாற்ற வா
ஓநாய் உரு மாராவா
ஊளையிட இரவு அழைக்குது
முழுநிலவே வெளியே வா.
Monday, November 1, 2010
Tuesday, October 12, 2010
நிலைக்கும் புரியாதது...
வெறி கொண்டு எழுவதேல்லாம்
வெற்றி கொண்டே விழும்
தவிப்பதெல்லாம் தவறி விழும் .
மிக உயரத்தை அளக்க முடியாது
மிக காற்றை ருசிக்க முடியாது
மிக கற்பனையை விளக்க முடியாது.
நிலைக்காதது தான் மானுட இனம்,
புரியாதது தான் கடவுளினம்.
புரிந்தது " நிலைக்கச் செய்வது புரியாதது தான் "
நிலைப்பது "புரியவைப்பதும் நிலைகச்செய்வது தான்"
வெற்றி கொண்டே விழும்
தவிப்பதெல்லாம் தவறி விழும் .
மிக உயரத்தை அளக்க முடியாது
மிக காற்றை ருசிக்க முடியாது
மிக கற்பனையை விளக்க முடியாது.
நிலைக்காதது தான் மானுட இனம்,
புரியாதது தான் கடவுளினம்.
புரிந்தது " நிலைக்கச் செய்வது புரியாதது தான் "
நிலைப்பது "புரியவைப்பதும் நிலைகச்செய்வது தான்"
Thursday, October 7, 2010
மறக்க நினைக்கிறன்.
காலை முதல் மாலை வரை உன்
நினைவு ஏங்குகிறது
இரவான பொழுதிலே அது
ஏனோ ஓங்குகிறது
பார்க்காத நாளெல்லாம்
பரமாகி போனேன்
பிரிவில் வளரும் நேசம் _உன்னில்
அடிமையாகி போனேன்
அச்ச மற்ற மனதிற்கு
அழகு கவிதை தந்தாய் _இன்று
பேசாத பிரிவாலே
அழவும் சொல்லித்தந்தாய்
கண்கள் மூடி பார்த்தாலும் _அழுகை
நிற்க மறுக்குது
உள்ளுக்குளே வழிந்து சென்று
நெஞ்சம் நிரப்புது.
Subscribe to:
Posts (Atom)

