காலை முதல் மாலை வரை உன்
நினைவு ஏங்குகிறது
இரவான பொழுதிலே அது
ஏனோ ஓங்குகிறது
பார்க்காத நாளெல்லாம்
பரமாகி போனேன்
பிரிவில் வளரும் நேசம் _உன்னில்
அடிமையாகி போனேன்
அச்ச மற்ற மனதிற்கு
அழகு கவிதை தந்தாய் _இன்று
பேசாத பிரிவாலே
அழவும் சொல்லித்தந்தாய்
கண்கள் மூடி பார்த்தாலும் _அழுகை
நிற்க மறுக்குது
உள்ளுக்குளே வழிந்து சென்று
நெஞ்சம் நிரப்புது.
No comments:
Post a Comment