கனவினை நேசி கனவினை நேசி
உயிரோடு உருவான கனவினை நேசி
பணம் காதல் பாசத்திற்கு கனவினை மறந்தோம்
எதோ ஒரு தொழில் செய்து வேசி போல் பிழைத்தோம்
இரவெல்லாம் கனவினை கண்ணீரில் நினைத்தோம்
யாருக்கும் தெரியாமல் மனதோடு புதைத்தோம்
வலியோடும் ரணமோடும் முகம் தினம் சிரிக்கும்
அடயாளம் தெரியாமல் கனவு தினம் அழுகும்
கண் முன்னே கனவு இறக்க காப்பாற்ற மறந்தோம்
விதிமேலே பழி வைத்து மீள துயர் கொண்டோம்
இனியனும் தலை நிமிர்ந்து கனவினை நேசி
மனமே நீ சுதந்திரமாய் கனவினை நேசி