Thursday, February 3, 2011

புரிதல்

ஊழ்வினை உந்த என் இடம் மறந்தேன்
உன்னிடம் உன்னுள் ஒருநொடி மறந்தேன்
ஆணி  வேரென பூமி துளைத்து
ஆகாயம் தொட்ட காற்றாய் மகிழ்ந்தேன்
காதல் புரிந்ததில் காதல் புரிந்தது
தடையில்லா  அன்பில் புரிதல் வளர்ந்தது
த பதில் ஆ முன் அடி சுவைக்கும்
கவி இல்லா  தாள் என மனம் கிடக்கும்.



Monday, January 17, 2011

கள்ளம்

பொன் நிறை கவர்ந்து
செல்வனே ஆவான்,
இரவுரங்க கள்வன் கண் .


மண்சரிய உருளும் கல்யை
தொடநிழலின் கணம்
கள்வர் செயல்.

அறம் பிடியில் நிசம்
சொல்லியும் கள்வன்
பொருட்டு கதை.


தாழ்ஆழம், வெளியோட்டை,
நாய் கடைவிரல் அறிவன்,
களவிடும் முன்னம் .


அறமரிந்து பொய் தெரிந்தே
உரைப்பவன், கோமகனே
ஆயினும் கயவன்.

நேரடி கண் கதவடி
கான் இருப்பின், நோக்கின்றி
நுழைய கயவர்.


கார்சூழ்ந்து அசைய
மரமென மெய், ஊண்
கை களவாடும்.


கர்மமரிய கர்வம் கனக்கும் ஆதலால்
மர்மம் போதிக்கும் நிலை.

இலை மறை

பெண் கல்,
ஆண் உளி,
சில பாகம் சிதைத்து தான் 
சிற்பம் கொணரும்.  


Monday, January 3, 2011

தெய்வம்

உடல் கிழிந்த 
வலி மகிழ்ந்து,
உயிர்  உணவாய்
தந்த தாய். 

Monday, December 13, 2010

நிலா தரிசனம்

யாருமில்லா சமவெளியில்
குத்தும் குளிர் இரவில்
உனக்காக வெகுநேரம்
தனிமையில் நான்

கருமேகம் மறைக்க -முழு நிலவு
உன்னை தடுக்க
உன்னால் உருமாற
காத்திருக்கும் ஓநாய் நான்

மனிதனாய் மாற்ற வா
ஓநாய் உரு மாராவா
ஊளையிட இரவு அழைக்குது
முழுநிலவே  வெளியே வா.

Tuesday, October 12, 2010

நிலைக்கும் புரியாதது...

வெறி கொண்டு எழுவதேல்லாம்
வெற்றி கொண்டே விழும்
தவிப்பதெல்லாம் தவறி விழும் .

மிக உயரத்தை அளக்க முடியாது
மிக காற்றை ருசிக்க முடியாது
மிக கற்பனையை விளக்க முடியாது.

நிலைக்காதது தான் மானுட இனம்,
புரியாதது தான் கடவுளினம்.
புரிந்தது  " நிலைக்கச் செய்வது புரியாதது தான் "
நிலைப்பது "புரியவைப்பதும்  நிலைகச்செய்வது தான்"