Thursday, October 11, 2012

அமைதி கொல்கிறது.

சப்தம் சுகமானது 
இரைச்சல் அழகனது, 

எங்கங்கோ பயணிக்கும் 
மனம் மறக்கும் இசை அழகனது, 

அமைதி மோசமானது
மிக அமைதி  கொல்கிறது.

எனக்குள்ளே இரைச்சல் துண்டும் 
அமைதியை வெறுக்கின்றேன், 

சப்தத்தில் சஞ்சரிக்கும் பொது 
மனதின் சொல் நான் கேட்பதேது ?

புற அமைதியில் அக குரல் 
புற இரைச்சல் அக அமைதி ...

பொறு



ஓடும்போது உதிர்ந்த கால்கள் 
தோல்வி தொட பயப்படும் வாழ்க்கை 
செய்யாத தவறுக்கு சுருக்கு
வெட்கமாய் உள்ளுணர்ச்சி ,  

கண் வலிக்கும் வரை கனவும் 
எண்ண முடியாத கோடி நிறம் 
கண் திறக்க பயம் 
யானை கனவு ஏறும்பான மாயம் 

காலம் விரைந்தோட வழியில்லையோ 
வலி மறைந்தால் சுகம் இல்லையோ 
கொதிக்கும் முள்ள 
வெடிக்கும் சொல் 
தாங்கும்மா .. அம்ம்மம்ம்மா ...

மரம் விழுந்தால் நன்று 
கிளை முறிந்தால் வலி 
இகழும் நாற்றம் சுமந்த நேரம் 
வெகுள்ளி மனதிடம் வேதனை பேரம் 

Tuesday, June 26, 2012

மனிதம் .



உருகும் சிந்தனை
கருகும் நிசம் ...
ஒய்யாரமாய் பிரச்சனைகள் ...

வழுக்கும் திட்டங்கள்
இழக்கும் மனிதர்கள்
அமைதியாய் சமுகம் ...

அவலம் அவலம் நம்
அடைகலம் மரணம்,

எடுத்து வை கொஞ்சம் தன்மானம்
உன் வருங்கால சந்ததிக்கு படிவமாக,

துறந்து போ, சொந்தம்
மறந்து போ '

எழதேரியாத நீ, என் விழுந்தாய் ?

Monday, April 23, 2012

என்ன இது


என்ன வலி இது போதும் போதும் 
கண்கள்  வற்றிவிட்ட குளமாய் மாறும் 
சுவாச குழலுக்குள்  ஏதோ அடைக்கும் 
கண்ணீர் மட்டும் இந்த காதலில் ஜெயிக்கும், 

தூறல் நிற்கும்  வரை தூரம் நடந்தேன் 
என்னை கொள்ளும் அந்த காலம் கடந்தேன் 
தாளம் தப்பிவிட்ட சுருதியாய் மெலிந்தேன் 
கண்கள் மூடி அந்த காதலை புதைத்தேன்..... 

Friday, February 3, 2012

மன உருக்கம்



இறந்தவர்கள்   தரும் துன்பத்தை விட - அவர்களை 
இழந்தவர்கள்  தரும் துன்பமே 
கண்ணீராய் கரைகிறது...