Tuesday, October 12, 2010

நிலைக்கும் புரியாதது...

வெறி கொண்டு எழுவதேல்லாம்
வெற்றி கொண்டே விழும்
தவிப்பதெல்லாம் தவறி விழும் .

மிக உயரத்தை அளக்க முடியாது
மிக காற்றை ருசிக்க முடியாது
மிக கற்பனையை விளக்க முடியாது.

நிலைக்காதது தான் மானுட இனம்,
புரியாதது தான் கடவுளினம்.
புரிந்தது  " நிலைக்கச் செய்வது புரியாதது தான் "
நிலைப்பது "புரியவைப்பதும்  நிலைகச்செய்வது தான்"

Thursday, October 7, 2010

மறக்க நினைக்கிறன்.

காலை முதல் மாலை வரை உன்
நினைவு ஏங்குகிறது 
இரவான பொழுதிலே அது
ஏனோ ஓங்குகிறது 

பார்க்காத நாளெல்லாம் 
பரமாகி போனேன் 
பிரிவில் வளரும் நேசம் _உன்னில்
அடிமையாகி போனேன் 

அச்ச மற்ற மனதிற்கு 
அழகு கவிதை தந்தாய் _இன்று 
பேசாத பிரிவாலே 
அழவும் சொல்லித்தந்தாய்

கண்கள் மூடி பார்த்தாலும்  _அழுகை
நிற்க மறுக்குது
உள்ளுக்குளே வழிந்து சென்று 
நெஞ்சம் நிரப்புது. 






எழுச்சி

நீ விழிக்கும் வரை இரவு நீடிக்கும்
உன் உணர்வின் ஓர் புள்ளி,
மருந்து கொண்ட தீக்குச்சி போல் _ உரச
மறந்து போனால் பற்றாது.

எங்கிருந்து வந்தது ஒரு துளி நெருப்பில்
ஒருகோடி பூலோகம்

உணர்ச்சி உரச எழுச்சி தீ எரியும் _ அதில்
இருண்ட வாழ்க்கைக்கு பாதை தெரியும்.

Tuesday, October 5, 2010

அவமானம் மற


முரண்

இருளை பற்றி எழுத போகிறேன்
அதற்கு
வெளிச்சம் வேண்டுமே .