என்ன வலி இது போதும் போதும்
கண்கள் வற்றிவிட்ட குளமாய் மாறும்
சுவாச குழலுக்குள் ஏதோ அடைக்கும்
கண்ணீர் மட்டும் இந்த காதலில் ஜெயிக்கும்,
தூறல் நிற்கும் வரை தூரம் நடந்தேன்
என்னை கொள்ளும் அந்த காலம் கடந்தேன்
தாளம் தப்பிவிட்ட சுருதியாய் மெலிந்தேன்
கண்கள் மூடி அந்த காதலை புதைத்தேன்.....