Sunday, October 2, 2011

இரவு மழை

இரவு மழை 

உடல் வலிக்கும் வரை வேலை,
நடை பாதை தூக்கம்,
இரவு மழையே 
பகலில் வா.

சம்பள பணம் தீர்ந்த பின்னும் 
கடன் வைத்து குடித்து விட்டு 
தெருவிலே விழுந்து விட்டேன்,
இரவு மழையே , எழுப்பவா.

காலை தூக்கம் வேண்டி,
முன் இரவே
வாசல்  கோலம்.
இரவு மழையே   வேண்டாம் போ. 

இருக்க இடம் இழந்து 
பிச்சையில் உயிர் வளர்த்தேன்,
இன்றேனும் குளிப்பதற்கு 
இரவு மழையே   உடனே வா.....

உடல் நினைய ஆசை
உடை நினைய இல்லை 
நாளைக்கும் வேலை
மழையே நீ இரவில் வா 

விளைநிலங்கள் என்ன விதவையா
வித்துக்கள் தாங்கி
மாசமாக காத்திருக்கிறது
மழையே நீ வா வா ....



 

Saturday, October 1, 2011

முரண்


விதவைக்கு வழி எங்கும் பூ தூவினர்
அவள் இறுதி ஊர்வலத்தில்.